Farm Info

Thursday, 10 June 2021 08:02 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விளக்கி அறிக்கை வெளியிட்டனர்.

நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல் உள்ளது. கருப்பு நாவாய் பூச்சியின் சேதாரம் நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் காணமுடியும். நாவாய் பூச்சியின் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டம் கூட்டமாக நெற்பயிரின் (Paddy Crops) தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே உள்ள தண்டு பகுதியில் சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது. இதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் தீயில் கருகியது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.

வேப்பங்கொட்டை கரைசல்

இதன் சேதாரம் பயிரின் வளர்ச்சி பருவத்தில் இருக்கும்போது நடுக்குருத்து வாடிவிடும். பூக்கும் தருணத்தில் இருக்கும் பட்சத்தில் வெண்கதிராக மாறிவிடும். இதனை கட்டுப்படுத்த தாவர பூச்சிக்கொல்லியான 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், அதாவது 25 கிலோ வேப்பங்கொட்டையை ஒரு எக்டேருக்கு பயன்படுத்த வேண்டும். இம்முறையை விவசாயிகள் பயன்படுத்தி நெற்பயிரைக் காத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

கத்தரியில் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறைகள்!

உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)