பருவநிலை மாற்றம் நிகழ்வதால் தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த கூடிய முறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருந்தலைப் புழு தாக்குதல் அனைத்து வயது மரத்தையும் தாக்கக் கூடியது. இதனால் தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல மாறிவிடும்.
தென்னை விவசாயம் (Coconut Farming)
கருந்தலைப் புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கிய இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் தென்னை இலைகள் அனைத்தும் கருதியது போல தோன்றுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் பூச்சி தாக்கிய மட்டைகளை வெட்டி நெருப்பில் இட்டு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த புழுக்களை கட்டுப்படுத்த பெத்தலிட், பிரக்கோனிட் ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகள் ஹேக்டருக்கு 300 எங்கள் என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னை தோப்புகளில் விடுவது நல்லது.
ஒருவேளை புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 ஈஸி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தியான் 0.05 சதவீதம் என ஏதேனும் ஒன்றை அதில் தெளிக்க வேண்டும்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பேர் மூலமாக பூச்சிமருந்து செலுத்துவது நல்லது. பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்திற்கு காய்கள் மற்றும் இளநீரை உபயோகப்படுத்தக் கூடாது. இந்த மருந்து தெளிப்பதற்கு முன் பாக முற்றிய காய்கள் அனைத்தையும் பறித்து விட வேண்டும்.
மேலும் இது தொடர்பான ஆலோசனைகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் (8940703385) ஆளியார் மற்றும் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம். மேலும் ஒட்டுண்ணிகளை பெற தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆளியார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்: விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!