பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 September, 2022 9:26 AM IST
Kisan Credit Card

விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கிசான் கிரெடி கார்டு பெற்று தங்களது பணத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் பெறும் கடன் தொகைக்கு மிக குறைவான வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. இத்துடன் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. பொதுவாக கிசான் கிரெடிட் கார்டு பெற விரும்பும் விவசாயிகள் நேரடியாக வங்கிக் கிளைக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். எனினும், வங்கிக் கிளைக்கே செல்லாமல் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என இரண்டு வங்கிகள் அறிவித்துள்ளன.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India), பெடரல் வங்கி (Federal Bank) ஆகிய இரண்டு வங்கிகளும் முதற்கட்டமாக டிஜிட்டல் முறையில் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. தற்போது தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் ஆவணங்களை வங்கிக் கிளைகளில் சரிபார்ப்பது போன்ற பேப்பர் வேலைகளே கிடையாது. முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும். ரிசர்வ் வங்கியின் முன்னெடுப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி ஆகிய வங்கிகள் விவசாயிகள் ஆன்லைனிலேயே கிசான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். ஆவணங்களும் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும். வங்கிக்கே செல்லாமல் உங்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க

தென்னங்ன்று விற்பனையில் விவசாயிகள்: வருமானத்திற்கு மாற்று வழி!

ரிசர்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்த உலக வங்கி: காரணம் இது தான்!

English Summary: Buy Kisan Credit Card easily: Good News for Farmers!
Published on: 21 September 2022, 09:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now