இயற்கை வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக குளோபல் நேச்சர் பவுண்டேசன் சார்பாக ' நம்ம திருச்சி இயற்கை விவசாய சந்தை' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரானா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஆரோக்கியம் பற்றியும் ரசாயனம் இல்லாத இயற்கை வழி விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் இயற்கை வழி பொருட்களை வாங்க விரும்பும் நுகர்வோர் சரியாய் நேரத்தில் தேவைப்படும் பொழுது இயற்கை வேளாண்மை பொருட்களை வாங்கிட இயலாமல் சிரமப்படும் சூழல் உள்ளது. அதே நேரத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளும் உழவர் உற்பத்தி நிறுவனங்களும் இயற்கை வழி விளைவித்த பொருட்களை விற்க சரியாய் சந்தை வாய்ப்புகளை தேடும் நிலையில் உள்ளனர்.
மார்ச் 7ம் தேதி முதல்...
இயற்கை வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக குளோபல் நேச்சர் பவுண்டேசன் சார்பாக ' நம்ம திருச்சி இயற்கை விவசாய சந்தை' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி நகரில் வருகின்ற மார்ச் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (07.03.21) காலை 8மணி முதல் மாலை 8மணி வரை மத்திய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீனிவாசா அரங்கில் நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சியை பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்கள் துவங்கி வைக்கிறார்கள்.
இயற்கை விளைப் பொருட்கள்
இந்த சந்தையில் பாரம்பரிய அரிசிவகைகள், சிறு தானியங்கள், நாட்டு காய்கறி விதைகள், மரசெக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி,, நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், மூலிகை தேநீர் பொடி , வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், தேன் மெழுகில் செய்த சோப்புகள், மருந்து பொருட்கள் உடல்பொலிவு பொருட்கள் (Cosmetics) மண்பாண்டப் பொருட்கள், மாடி தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள், மூங்கில் பயன்பாட்டு பொருட்கள், நீரா பானம் என இன்னும் ஏராளமான இயற்கை வழி உற்பத்தி செய்த பொருட்களும் கிடைக்கும்.
பிளாஸ்டிக் பைகள் கிடையாது
இயற்கை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நேரடியாக விற்பனை செய்யும் இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக நெகிழி இல்லா சந்தை ஆகும். விவசாயிகள், ரசாயனப் பயன்பாடு இல்லாத, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, நேரடியாக விற்பனை செய்து தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் நம்ம திருச்சி இயற்கை விவசாய சந்தை' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் மிகை இல்லை. இயற்கை விவசாயத்தை பற்றி அறிந்துகொள்ள வேளாண்மை வல்லுநர்கள் உரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் சித்த மருத்துவ பரிசோதனை
மேலும் சந்தைக்கு வருகை தரும் அனைவருக்கும் இலவச சித்தா மற்றும் இயற்கை மருத்தவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'என்ன சாப்பிடணும்' 'எப்படி சாப்பிடணும்' என்ற தலைப்பில் சித்த மருத்துவர் திருமதி லட்சுமி கீதா அவர்களும் உணவே மருந்து என்ற தலைப்பில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஆர். சுகுமார் அவர்களும் உரையாற்றுகின்றனர். பாரம்பரியத்தையும் ஆரோக்கியத்தையும் இயற்கை வேளாண்மை பொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
மேலும் படிக்க...
தேங்காய் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்!!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்பத்தி மையம்!
நெல்லியில் ரூ.78 கோடியில் உணவுப் பூங்கா - அடிக்கல் நாட்டிய முதல்வர்!!