நைட்ரஜன் இரசாயண உரங்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் நாம் செலுத்தும் சத்து விரையமாவதுடன், அதிக உற்பத்திச் செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற பாதகங்களை ஏற்படுத்துகின்றன. நெல் உற்பத்திக்கு நைட்ரஜனின் தேவயான அளவு இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. தாவரத்தில் நைட்ரஜனின் அளவை கண்டுப் பிடிப்பதன் மூலம் 1 பயிரின் நைட்ரஜன் தேவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். அதிக உரப் பாவணையை தவிர்க்க முடியும்.
முக்கியமான வளர்ச்சி நிலைகளில் குறிப்பாக வளரும் பருவத்தில் நைட்ரஜன் உரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். தாவரத்தின் நைட்ரஜனின் அளவை கண்டு பிடிப்பதற்கு இலை நிறச்சுட்டி பயன்படுத்தப்படுகிறது.
எளிமையான மற்றும் செலவு குறைவான முறை இதுவாகும்.
இலை நிறச்சுட்டியில் இளம் பச்சை, கிளிப்பச்சை, அடா் பச்சை, மிக அடா் பச்சை மற்றும் மிக மிக அடா் பச்சை என ஐந்து வண்ணங்கள் உள்ளன. விவசாயிகள் இந்த வண்ணங்களைப் பயன்படுத்தியே உரமிட வேண்டுமா, வேண்டாமா என தாங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். இந்த இலை நிறச்சுட்டி மூலம் நெல்,கோதுமை, சோளம் போன்ற பயிர்களினது நைட்ரஜனின் தேவையை அறிந்து கொள்ள முடியும். நெற்பயிரில் நைட்ரஜன் சத்து மேலாண்மை "நிலையானநேரத்தில் உரமிடல்" மற்றும் "பயிரின் தேவையறிந்து உரமிடல்" என இரு வகைப்படும்.
நிலையான நேரத்தில் உரமிடல் என்பது உரங்களை குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட அளவு செலுத்த வேண்டும். பயிரின் தேவையறிந்து உரமிட இலை நிறச்சுட்டி உதவுகிறது. இலை நிறச்சுட்டியின் மூலம் முடிவுசெய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து நைட்ரஜன் முடிவுசெய்யப்படுகிறது.
அளவிடும் முறை
இலை நிறச்சுட்டியைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது
- சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப் படாதவாறு அளவிடப்பட வேண்டும்.
- இலையின் பச்சை நிற அளவை மதிப்பிடுவது நடவு நட்ட 14 ஆம் நாளிலிருந்து இல்லையெனில்
- விதைத்த 21 ஆம் நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் செய்யப்பட வேண்டும்.
மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும். மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்பட வேண்டும். அளவிடும் காலம் பொதுவாக ஒரு பயிருக்கு ஒரு குறிப்பிட்ட நேரமாக இருத்தல் வேண்டும் (காலை நேரங்களில்)
மேலும் படிக்க...