தினமும் கை மேல் காசு கிடைப்பதால், வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 ஹெக்டேரில் வெண்டை சாகுபடி நடக்கிறது. விதைத்த, 40 நாட்களில் வெண்டை அறுவடைக்கு தயாராகிறது. பூச்சி தாக்குதலை தடுக்க விதைத்த, 20 நாட்களுக்கு பிறகு ஒரு முறை மட்டும், டி.ஏ.பி., உரம் தெளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும்.
வெண்டை சாகுபடி (Vendai Cultivation)
தொடர்ந்து, தினமும் மூன்று மாதங்களுக்கு வெண்டையை அறுவடை செய்யலாம். இரண்டு மாதங்களுக்கு முன், விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள், ஒரு கிலோ வெண்டைக்காயை, 35 முதல், 40 ரூபாய் வரை வாங்கினர்.
விளைச்சல் அதிகரித்ததால் தற்போது, 15 முதல், 20 ரூபாய்க்கு வாங்குகின்றனர். ஆனால், 50 சென்ட் நிலத்தில் தினமும், 60 கிலோ வெண்டை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து கிடைப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை.
வெண்டையில், ஜானி ரக விதைகளை விதைத்தால், செடியில் வெள்ளை ஏற்படுவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.குறுகிய காலத்திலும், தினமும் பணம் கிடைப்பதாலும், நஷ்டம் ஏற்படுவதில்லை என்பதாலும், வெண்டை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க
நெற்பயிரில் மகசூல் பெற நல்விதைகளே அவசியம்: விதைச்சான்று துறை!
ரசாயன உரங்களுக்குப் பதிலாக நானோ உரங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல் !