நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 November, 2023 4:47 PM IST
Beekeeping

விவசாய பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தேனீ வளர்ப்பு கூடுதல் வருமானத்தை தரக்கூடியது. முறையான வழிமுறைகளை பயன்படுத்தி தேனீ வளர்ப்பில் ஈடுப்பட்டால் நல்ல லாபம் பார்க்கலாம். இருப்பினும், தேனீ வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்திய ஹனி அலையன்ஸ் இயக்குனர் நம்ரதா கன்னா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தேன் ஏற்றுமதி செய்யும் டாப் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தேன் ஏற்றுமதி அதிகமாக நடைப்பெறுகிறது. மேலும், தேன் உற்பத்தியில் இந்தியா உலகில் 8-வது இடத்திலும், தேன் ஏற்றுமதியில் 9-வது இடத்திலும் உள்ளது.

அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க இயலும். தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் இந்திய தேனீ வளர்ப்பவர்கள், அவர்களால் பராமரிக்கப்படும் தேனீக் கூட்டங்களில் இருந்து மூலத் தேனைப் பிரித்தெடுக்கின்றனர். ஒரு சில தேனீ வளர்ப்பவர்கள் மட்டுமே மெழுகு மற்றும் மகரந்தம் போன்ற துணை தயாரிப்புகளை பிரித்தெடுக்கின்றனர். துணை தயாரிப்புகளுக்கும் சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனீ வளர்ப்பு என்பது வனவியல் மற்றும் விவசாய துணை செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது. மேலும் நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடு முறையாகும்.தேனீ வளர்ப்பவர்களுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் வழங்குவதோடு பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையையும் வழங்குகிறது.

தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு குறைந்த அளவு ஆரம்ப மூலதனம் மற்றும் நிலமும், குறைந்த நேரமும் தேவை. பழங்குடியினர்,வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும் ஆற்றலை தேனீ வளர்ப்பு கொண்டுள்ளது. தேனீ வளர்ப்பு 4 வழிகளில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது:

  • தேனீ வளர்ப்பு என்பது வருமானம் ஈட்டும் செயலாகும்.
  • தேன் மற்றும் பிற துணை பொருட்கள் மிகவும் மதிப்புமிக்கவை. உணவு, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • தேனீ வளர்ப்பு குறுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் விவசாய நடவடிக்கைகளை ஆதரிக்கிறது மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
  • தேனீ வளர்ப்பு வனப் பாதுகாப்பை ஆதரிக்கிறது மற்றும் விவசாயிகள் / பழங்குடியின மக்களுக்கு கூடுதல் வருமானம் அளிக்கிறது.

இதையும் படிங்க: ஹஸ்முக் ஷா விருதை தட்டித் தூக்கிய ICAR-CMFRI பவளப்பாறை ஆய்வு

மேற்குறிப்பிட்டது போல் நன்மைகள் இருப்பினும், தேனீ வளர்ப்பில் பல சவால்கள் உள்ளன. தேனீப் பண்ணை அமைக்கத் தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கும், தேனீ வளர்ப்போருக்கும் ஏற்ற இடமாக இருத்தல் அவசியம். தேனீ வளர்க்கும் நிலப்பரப்பில் போதிய உணவின்மை, கூட்டம் பிரிதல், ராணி தேன் உயிரிழப்பு, மகரந்தத்தை சேகரிக்கும் தன்மை குறைதல், தப்பியோடுதல், காலநிலை மாற்றம், வறட்சி போன்ற சவால்கள் தேனீ விவசாயிகளுக்கு ஒரு புறம் உள்ளது.

மற்றொரு புறம் தேனீ வளர்ப்பவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக கருதப்படுவது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தேனீ வளர்ப்பு வணிகத்தை சேதப்படுத்தும் சர்க்கரை கலப்படங்கள் தான். தீங்கிழைக்கும் சர்க்கரை பாகின் விரிவான பயன்பாடு தேனில் அதன் அளவை அதிகரிக்க ஒரு பொதுவான கலப்படமாக மாறியுள்ளது.

பெரிய வணிக பிராண்டுகளுக்கு இதன் மூலம் பெரும் லாபம் கிடைத்தாலும், கச்சா தேனை விற்கும் தேனீ வளர்ப்பவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் மூல தேன் அறுவடைக்கு சரியான விலை கிடைப்பதில்லை என புலம்பும் நிலை தான் தற்போதும் நீடிக்கிறது.

புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் மாசுபாடு, நோய் மற்றும் தேனீக்களை பாதிக்கும் பூச்சிகள் ஆகியவை தேனீ வளர்ப்பவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகள், பல்வேறு வைரஸ்கள், மைக்ரோஸ்போரிடியா, பாக்டீரியா தொற்றுகள் மற்றும் பூஞ்சை போன்றவற்றாலும் தேனீக்கள் பாதிக்கப்படலாம்.

இது தேனீக்களில் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கிறது, இதன் காரணமாக அவை குறிப்பிடத்தக்க பலவீனம் அல்லது மரணத்தை கூட வெளிப்படுத்துகின்றன. போதிய உள்கட்டமைப்பு வசதி மற்றும் தேனீ வளர்ப்பவர்களுக்கான பயிற்சியின்மை ஆகியவை இந்தத் தொழிலில் சில முக்கிய சவால்களாக கருதப்படுகிறது. தேனீ வளர்ப்பவர்கள் நல்ல தேனீ வளர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இது நிலையான தேனீ வளர்ப்பிற்கு மிகவும் முக்கியமானது. தொடர்ச்சியான பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் தேனீ வளர்ப்பு பற்றிய அறிவுப் பகிர்வு ஆகியவை சவால்களை சமாளிக்க உதவும் எனவும் இந்திய ஹனி அலையன்ஸ் இயக்குனர் நம்ரதா கன்னா தெரிவித்துள்ளார்.

இதையும் காண்க:

YSR Achievement விருதினை வென்று கவனத்தை ஈர்த்த பழங்குடியின பெண் விவசாயி!

சூப்பர்! பாதி விலையில் வெங்காயம் வாங்க தமிழக அரசு நடவடிக்கை

English Summary: challenges for Honey beekeepers thoughts by Namrata Khanna
Published on: 06 November 2023, 04:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now