Farm Info

Sunday, 02 January 2022 08:19 AM , by: Elavarse Sivakumar

டெல்டா உட்பட 5மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

தென் தமிழக கடற்கரையை ஒட்டி (4.2 முதல் 5.8 கி.மீ., உயரம் வரை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

02.01.22

  • இதன் காரணமாக,டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.01.22

  • தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

04.01.22

  • தென் தமிழகக் கடலோரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை (Chennai)

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

02.01.22 முதல் 03.01.22 வரை

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு  சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் கொட்டப்போகுது கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம்: புத்தாண்டும் மழையுடனா? வானிலை ஆய்வு மையம் தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)