வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
20.06.21
வெப்பச்சலனத்தால், நீலகிரி, கோவை, தேனி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
21.06.21
கனமழை (Heavy rain)
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுவைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry weather)
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
20.06.21
வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)
20.05.21, 21.06.21
கேரளா, கர்நாடகக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
20.05.21 முதல் 24.06.21 வரை (From 20.05.21 to 24.06.21)
-
தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!