தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில், 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
களையிழந்த புத்தாண்டு
வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது, மழை செய்து வருகிறது. புத்தாண்டுத் தொடக்கத்தின்போதும், கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில், தாழ்வானப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த மழையால் புத்தாண்டுக்கொண்டாட்டமும் களையிழந்தது.
ஒருபுறம் மழை, மறுபுறம் கொரோனா வைரஸ் தொற்று என மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது பொங்கலின்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வளிமண்டல சுழற்சி (Atmospheric circulation)
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதையொட்டிய பூமத்திய ரேகைப் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
10.01.22
-
இதன் காரணமாக, தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும்.
-
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
11.01.22
நாளை மற்றும் நாளை மறுநாளில், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
மழை (Rain)
-
தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் 13ம் தேதி மிதமான மழை பெய்யும்.
-
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 30டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்ஷியஸாகவும் வெப்பநிலை பதிவாகும்.
மழைப்பதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்த பகுதியிலும் 1 செ.மீ., அளவுக்குக் கூட மழை பெய்யவில்லை.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், இடி, மின்னல் மழையுடன் கூடிய சூறாவளிக் காற்று மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் உறுதி!