விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேளாண் வானிலை பற்றி தெரிந்து கொண்டு பயிர் சாகுபடி செய்ய மேகதூது செயலி (Cellphone -app)அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிர்கள் மற்றும் கால்நடைகளின் இயற்கை சார்ந்த பேரிழப்பிற்கு, வானிலை மாறுபாடு, அதனை சார்ந்த சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகியவை மிக முக்கிய காரணியாகத் திகழ்கின்றன.
எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் வானிலை பற்றி தெரிந்து கொள்ள மேகதூது என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு விவசாயம் செய்வதன் மூலமாக, இயற்கை பேரழிவை தவிர்த்து விவசாயித்தில் இலாபம் ஈட்ட முடியும்.
புது செயலி (New Cellphone-app)
இதனை நோக்கமாகக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கூட்டு முயற்சியால் மேகதூது செயலி உருவாக்கப்பட்டு புவி அறிவியல் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வானிலை மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை முற்றிலும் தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. எனினும் வானிலை முன்னறிவிப்புக்களை அறிந்து கொள்வதன் மூலம் பாதிப்புக்களை குறைக்கலாம்.
பதிவிறக்கம் (Download)
விவசாயிகளின் கைபேசியில் மேகதூது செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் விவசாயிகள் பெயர், கைபேசி எண், மொழி, மாவட்டம் மற்றும் மாநிலத்தை தேர்ந்தெடுத்து செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த செயலியின் மூலம் வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேளாண் வானிலை புல பிரிவின் மூலம் மாவட்ட அளவிலான முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தின் வானிலை சார்ந்த முன்னறிவிப்புக்களை அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள மாவட்ட வேளாண் வானிலை பிரிவு அறிவிக்கும்.
வெப்பம், மழைபொழிவு காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை போன்ற முன்னறிவிப்புக்களை வட்டார அளவில் முன்கூட்டியே அறிந்து வேளாண்மை செய்வதன் மூலமாக விவசாயத்தில் அதிக இலாபம் (Extra Benefit) ஈட்ட முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்
ஸ்ரீனிவாசன்
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
வேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!