தென்னந்தோப்பில் மரநாய், எலிகள், அணில் போன்ற விலங்கினங்களால் காய், வேர், இளம் குருத்து பகுதிகமரில் அதிகம் சேதம் உண்டாக்குகின்றன. ஒரு புறம் பூச்சி, நோய் தாக்குதல் மறுபுறம் இந்த விலங்கினங்களின் தாக்குதலால் விவசாயிகள் பலப் பிரச்னைகளை எதிர்கொள்வதுடன், பெரும் பொருள் நஷ்டத்தையும் அடைகின்றனர். இந்தப் பிரச்னைகளில் இருந்து மீள சில வழிகளைக் கையாள வேண்டியது, கட்டாயம். அதனைப் பற்றிப் பார்ப்போம்.
மரநாய்
-
இது கிரிபிள்ளை இனத்தை சேர்ந்தது இரவில் இதன் ஆட்டம் அதிகமாக காணப்படும்.
-
ஒரு நாளில் 8 முதல் 10 காய்களை (இளநீர்) ஓட்டைப்போட்டு குடிக்கும்.
-
மிகவும் கூச்ச சுபாவம் கொண்டது. பகலில் மரத்தின் உச்சியில் தங்கி இருக்கும்.
-
நாயைப் போன்ற மோப்ப சக்தி வாய்ந்த விலங்கினம் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
எலிகள்
-
இவை 3 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினம்.
-
ஒரே பிரசவத்தில் 20 குட்டிகள் ஈனும் தன்மை கொண்டது.
-
இவை நாற்று பருவத்திலும், நடுக்குருத்து பகுதியிலும், வேரில் கடித்துச் சேதப்படுத்தும்.
-
பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலங்களில் தாக்குதல் அதிகமாகும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
-
தென்னை மரங்கள் நடும் போது பரிந்துரைப்படி இடைவெளியில் நட வேண்டும்.
-
வரிசைக்கு வரிசை 25 அடி செடிக்கு செடிக்கு 25 அடி
-
மரத்தில் உள்ள காய்ந்து போன மட்டைகள், பன்னாடை போன்றவை அகற்றிச் சுத்தப்படுத்த வேண்டும்.
- அருகில் வாழைப்பழ தோட்டம் இருந்தால் மர நாய்கள் அதிகமாக இருக்கும்.
- மரத்தைச் சுற்றி கருப்பு பாலித்தின் சீட் கொண்டு 6 அடி உயரத்தில் கட்ட வேண்டும். முள் கம்பியால் சுற்றி நடு மரத்தில் கட்ட வேண்டும்.
- எலிகளைக் கொல்ல எலி மருந்து புரோமோடையலான் இளநீர் குலைகளுக்கு இடையே வைக்க வேண்டும். அதிகத் தொந்தரவு இருந்தால் நச்சு உணவு வைத்து அழிக்கலாம்.
தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
94435 70289
மேலும் படிக்க...
தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!
குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!