விலை சரியக்கூடும் என்பதால், பொள்ளாச்சி பகுதியிலுள்ள, தென்னந்தோப்புகளில் கோடிக் கணக்கில் தேங்காய்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தேங்காய் உற்பத்தி (Coconut production)
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் மற்றும் கிணத்துக்கடவுப் பகுதியில், தேங்காய் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
கொரோனாத் தொற்று (Coronary infection)
கடந்த ஒரு வருடகாலமாக கொரோனா தொற்று பரவல் மற்றும் போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால், தேங்காய் உற்பத்தி இருந்தும், விற்பனை குறைந்துள்ளது.
இதனால், பொள்ளாச்சி பகுதியில், கருப்பு தேங்காய் மற்றும் பச்சை ரகத் தேங்காய்கள் பறிக்கப்பட்டு, தோப்புகளுக்குள் குவிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில வியாபாரிகள், தேங்காயைக் கொள்முதல் செய்து. கோடிக்கணக்கில் தோப்புகளில் குவித்துள்ளனர். விலை கிடைக்கும்போது, காங்கேயம் கொப்பரைக் களங்களுக்கும், எண்ணெய் ஆலைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
தேங்காய் சீசன் (Coconut season)
இந்நிலையில், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி ஒருவர் கூறுகையில், தேங்காய் சீசன் உச்சத்தில் உள்ள தமிழகத்தின் பல பகுதியில் இருந்து, தினமும், 700 லோடு தோங்காய் வருகை தருவது வழக்கம்.
கர்நாடகாவில் சீசன் (Season in Karnataka)
அடுத்த மாதம் கர்நாடகாவில் சீசன் துவங்கினால், தேங்காய் லோடு அதிகளவில் வருகை தரும். தற்போது காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, ஒரு டன் பச்சை ரகத் தேங்காய் ரூ.28,500க்கும், கருப்பு ரகத் தேங்காய் ரூ.31,000க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண ரகக் கொப்பரை கிலோ கிலோ ரூ.2,360 க்கும், தேங்காய் பவுடர் கிலோ ரூ.155க்கும், சாதாரண ரக கொப்பரை கிலோ ரூ.103, ஸ்பெஷல் கொப்பரை ரூ.105க்கும் விற்பனையாகிறது.
வரும் நாட்களில், தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும், காங்கேயத்தில் தேங்காய்கள் குவியும். ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால், கண்டிப்பாக விலை வீழ்ச்சி அடையும். இதனால், கொப்பரை கிலோ, ரூ.90க்கு கீழ் சரியலாம்.
நஷ்டம் (Loss)
எனவே, தற்போதைய விலை நிலவரத்தில் விற்பனை செய்து பயனடையலாம். பருவமழை தொடரும் பட்சத்தில், தோப்புகளில் குவிந்து கிடக்கும் கருப்பு தேங்காய்கள் முளைக்கத் துவங்கி விடும். இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்படும்.
கொள்முதல் நிலையங்கள்
தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க, மாநிலம் முழுவதும் அரசு கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!