தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பனிக்கு பெயர் பெற்றது (Famous for snow)
பொதுவாக மார்கழி மாதத்தில் வீசும் கடும்பனியே பெயர் பெற்றது. ஆனால் இந்த இயற்கை விதிக்கு மாறாக, இம்முறை பருவம் தவறி மழை பெய்துள்ளது.
மூழ்கிய பயிர்கள் (Submerged crops)
இதனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி பொண்டரிகபுரம்,
திருவிடைமருதூர் அருகேயுள்ள முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பல ஏக்கர் பரப்பிலான நெய்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
அவ்வாறு பாதிக்கப்பட்டப் பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், அப்போது, இம்மாவட்டத்தில் புரெவி
புயல் காரணமாக 8.500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
10 மடங்கு மழை(10 Fold rain)
மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை 100 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சில வட்டாரங்களில் 150 முதல் 160 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
குறிப்பாக திருப்பனந்தாள், திருவிடைமருதூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பௌண்டரிகபுரம், மாங்குடி முத்தூர் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விளைந்த நெற்பயிர்கள் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது
கணக்கீடு செய்ய உத்தரவு (Order to do the calculation)
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வேளாண், வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!
கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!
நெருங்கி வருகிறது தைப் பொங்கல் - தொடர் மழையால் மண்பானைகள் தயாரிப்பு பாதிப்பு!