இந்த ஆண்டு , பீகாரில் பல மாவட்டங்களில் வண்ணமயமான காலிஃபிளவர் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் ஒவ்வொரு பகுதியிலும் மஞ்சள் மற்றும் வெள்ளை முட்டைக்கோஸ் சாகுபடி செய்கிறார்கள். மேலும் சில விவசாயிகள், கலர் காலிஃபிளவர் பயிரிடுவது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிற காலிஃபிளவரை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளும் பல உள்ளன என்பது இதன் சிறப்பாகும்.
மேலும், இதனால் விவசாயிகள் நல்ல வருமானமும் ஈட்ட முடியும். சில விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைந்தும் உள்ளனர். டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய க்ரிஷி விஸ்வவித்யாலயா பேராசிரியர் மற்றும் தலைமை விஞ்ஞானி (தாவர நோயியல்) மற்றும் இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளரும் மற்றும் முதன்மை ஆய்வாளர் டாக்டர் எஸ்.கே. சிங், டிஜிட்டல் மூலம் விவசாயிக்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கியுள்ளனர்.
டாக்டர் எஸ்.கே. சிங்கின் கூற்றுப்படி, பீகாரின் சில பகுதிகளில், வயலட் மற்றும் மஞ்சள் காலிஃபிளவர், சில முற்போக்கான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது, இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பீகார் விவசாயிகள் எப்பொழுதும் விவசாயத்தில் புதிதாக ஏதாவது முயற்சி செய்து மகசூலை சிறப்பாக செய்கிறார்கள். எனவே, புதிதாக, ஒரு காயை பயிரிட்டு வருமானம் ஈட்ட நினைக்கும், விவசாய மக்களுக்கு, இது நல்ல குறிப்பாகும். மேலும் தெரிந்துக்கொள்ள கீழே படியுங்கள்.
இந்த ஆண்டு சில விவசாயிகள் வண்ண காலிஃபிளவர் பயிரிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். சோதனை அடிப்படையில் வண்ண காலிஃபிளவர் பயிரிட்டுள்ளனர், என்றாலும் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அடுத்த பருவத்தில் பெரும்பாலான மக்கள் இந்த வண்ணமயமான காலிஃபிளவரை ருசிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதில் வைட்டமின்களும், ஏறலாம் குவிந்திருக்கின்றனர், உடல் அரோக்கியத்திற்கும் இவை நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சங்கம்: பிரதமர் வருகையும், இளையராஜா பாட்டு கச்சேரியும்! அறிந்திடுங்கள்
இந்த வகையைப் பற்றியும், அதன் நன்மை பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள் (Learn about this category and its benefits)
டாக்டர் எஸ்.கே.சிங் மஞ்சள் காலிஃபிளவரில் கரோட்டினா என்றும் , இளஞ்சிவப்பு, ஊதா ஆகிய காலிஃபிளவரில் அலெண்டிலா என்றும் விளக்குகிறார். இந்த முட்டைக்கோஸ் பார்வையை அதிகரிக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவியாக இருக்கும்.
நீங்கள் பயிரிட இதன் விதைகளை எப்படி பெறுவது (How to get its seeds to cultivate)
அமேசான், பிளிப்கார்ட் அல்லது ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் தளங்களில் விவசாயிகளிடமிருந்து வண்ண காலிஃபிளவர் விதைகளை வாங்கலாம், என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முதலில் சிறிய அளவில் சாகுபடி செய்து வெற்றி பெற்ற பிறகு, பெரிய அளவில் நடவு செய்யுங்கள். காலிஃபிளவர் சாகுபடி செய்வது போல் வண்ண காலிஃபிளவர் சாகுபடி செய்ய வேண்டும். அடுத்த சீசனில் பெரும்பாலானோர் ரங்கோலி காலிஃபிளவரின் சுவையை ருசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
வானிலை ஆய்வு மையம்: அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்!
வண்ண காலிஃபிளவரில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வைட்டமின்-சியும் இதில் ஏராளமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
வயலட் காலிஃபிளவரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன மற்றும் கால்சியம் குளோரைடு மற்றும் வைட்டமின்கள் செரிமான அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன, இது ஏற்கனவே பிரிட்டன் மற்றும் பிரான்சில் பயிரிடப்படுகிறது. அனைத்து வகையான வைட்டமின்களும் இதில் காணப்படுகின்றன என்பது சிறப்பாகும்.
மேலும் படிக்க:
சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் எவ்வளவு?