விவசாயிகளை மகிழ்விக்கும் செய்தி ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முக்கியப் பங்கு
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து வாகனங்களைப் பொருத்தவரை, எதிர்காலத்தில்
எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சார வாகனங்களும் தான் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கேள்வி
3 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார வாகனங்கள் தொடர்பாக நான் பேசிய போது, பலர் கேள்வி எழுப்பினர். ஆனால், தற்போது, மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
மின்சார டிராக்டர்கள்
மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்களை தொடர்ந்து, விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
ரயிலில் லக்கேஜிற்கு 6 மடங்கு அபராதம்- பயணிகளே உஷார்!
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!