தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் இறுதி வரை வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமல்லாமல், பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் விளைச்சலை செய்தனர். டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், 'புரெவி' ஆகிய புயல்களால் 15 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அறுவடை நேரம் ஜனவரியில், பருவம் எதிர்பாராத மழையாலும், பல மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. மொத்தமாக, 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண் துறையினர் கையில் எடுத்தனர். தற்போது, 1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மாநிலம் முழுதும், 8 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளது. வழக்கமாக, பயிர் இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இம்முறை, முதல்வர் ஸ்டாலின் அவர்களே தன் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவு செய்துள்ளனர். தேதி இன்னும் முடிவாகாததால் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: