சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டுத் திட்டம் (Crop Insurance Scheme)
செங்கல்பட்டு மாவட்டத்தில் ராபி 2021ல் நெல் II (சம்பா) பருவத்திற்கு மத்திய மாநில அரசின் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத்திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் சேர்ந்து பலன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட விவசாகிளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற விவசாயிகள் (Eligible farmers)
இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான நெல் பயிருக்கு மட்டும் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுடன், குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் இந்தத்திட்டத்தில் சேரத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
பயிர்கடன் பெறும் விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்தும், பயிர்கடன் பெறாத விவசாயிகளும், தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம்.
விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
ஆதார் அட்டை நகல்
-
வங்கி கணக்கு எண்
-
IFSC கோர்டு எண்
-
வங்கிக்கண்ககுப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்
-
கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நடப்பு
-
சாகுபடி அடங்கல்
-
முன் மொழிவு படிவம்
-
விவசாயி பதிவு படிவம்
மேலேக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன், நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.473/- செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
காலக்கெடு (Deadline)
நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 15.11.2021ஆகும். விரிவான விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவர்களைத் தொடர்பு கொண்டும், குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையைச் செலுத்தி பயிர் காப்பீடு செய்தும், விவசாயிகள் பலன் பெறலாம்.
தகவல்
முனைவர் எல்.சுரேஷ்
வேளாண்மை இணை இயக்குநர்
செங்கல்பட்டு மாவட்டம்
மேலும் படிக்க...
விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்ப்பது எப்படி?
விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்- அரசு அதிரடி முடிவு!