Farm Info

Wednesday, 10 November 2021 08:34 AM , by: Elavarse Sivakumar

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய இன்னும் சில தினங்களே காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயிர்க்காப்பீடு (Crop insurance)

கணக்கில்லாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய இயற்கை சீற்றங்களின்போது ஏற்படும் இழப்பில் இருந்து விவசாயிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாக, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து வேளாண்துறைச் செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

6.91 லட்சம் ஏக்கர் (6.91 lakh acres)

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை, முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நவ.15

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாள்.

டிசம்பர் 15

கன்னியாகுமரி, அரியலுார், திண்டுக்கல், விருது நகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை, டிச., 15 கடைசி நாள்.

வடகிழக்கு பருவ மழையால் நெல் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.எனவே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் வழியாக உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆவணங்கள் (Documents)

முன்மொழிவு விண்ணப்பம்

பதிவு விண்ணப்பம்

அடங்கல்

விதைப்பு அறிக்கை

வங்கி கணக்கு புத்தக நகல்,

ஆதார் அட்டை நகல்

ஆகியவற்றுடன், பயிர் காப்பீட்டு தொகையில், 15 சதவீதத் தொகையை, விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)