Farm Info

Tuesday, 28 September 2021 09:58 AM , by: Elavarse Sivakumar

Credit : Blogger

சாகுபடி செய்துள்ள பசுந்தாள் உரப்பயிர்களைத் தகுந்த நேரத்தில் மடக்கி உழுது கூடுதல் மகசூலுக்கு விவசாயிகள் வித்திட முடியும் என வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பா நெல் சாகுபடி (Samba paddy cultivation)

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் பரவலாக 5200 எக்டர் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பா நெல் சாகுபடிக்கு முன்னதாக பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்து 50% அளவில் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தலாம்.

அரிமளம் வட்டாரத்தில் கீழப்பனையூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்கைப்பூண்டு, பசுந்தாள் உர சாகுபடி பயிர்கள், தற்பொழுது மடக்கி உழும் தருணத்தில், வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.

அரிமளம் வட்டாரத்தில் சுமார் 1200 எக்டர் பரப்பளவில் பசுந்தாள் உரப்பயிர்களை விவசாயிகள் தற்பொழுது சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் கா.காளிமுத்து, தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு மு.மதியழகன், வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு சி.முகமது ரபி மற்றும் அரிமளம் வட்டார வேளாண்மை அலுவலர் க.வீரமணி, ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

  • அப்போது, பசுந்தாள் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு 20 கிலோ அளவில் தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து 25நாட்களில் அல்லது 50% பூ பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்.

  • தொடர்ந்து நெல் சாகுபடி செய்யும் பட்சத்தில், அதற்கு ஆகும் தழைச்சத்து செலவை 25 % வரை மிச்சப்படுத்தலாம்.

  • பசுந்தாள் உரப்பயிர்களானது மண்ணில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேகரித்து வைக்கின்றன.

  • இவற்றை மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் உள்ள அங்கக சத்து அதிகரிக்கிறது.

  • மண்ணில் நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர் பெருக்கம் அடைகிறது.

  • இதனால், மண்ணிற்கு எளிதாக கிடைக்கக் கூடிய சத்துக்களுடைய அளவு அதிகரிக்கிறது.

மண்ணில் நீர் சேமிப்பு திறன் அதிகமாகிறது. காற்றோட்ட மாகவும் இருப்பதால் தொடர்ந்து சாகுபடி செய்யக்கூடிய நெல் பயிர்கள் அதிக மகசூல் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, அரிமளம் வட்டார விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பசுந்தாள் உரப்பயிர்களை உரிய பருவத்தில் மடக்கி உழவு செய்து மண்வளத்தை மேம்படுத்தி சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் க.காளிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க...

எப்போதும் வரும் நாற்று நடும் ஆசை- வயலில் இறங்கி நாற்று நட்ட ஆட்சியர் தம்பதி!

12 பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டன, 6 படிப்படியாக நீக்கப்பட்டன: மத்திய அரசு ராஜ்யசபாவிடம் கூறுகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)