Farm Info

Monday, 09 August 2021 11:56 AM , by: T. Vigneshwaran

Curfew announced in Tamil Nadu

தமிழ்நாட்டில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் இன்று(ஆகஸ்ட் 09) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்ஜ வேண்டும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டும், திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கவனம்கொள்ளவேண்டும். வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவது சம்மந்தப்பட்ட நிர்வாகம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக பொறுத்தப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படவேண்டும், கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

இவை அனைத்தும் தமிழக அரசு பொதுவாக வெளியிட்ட அறிவிப்புகள். இவை தவிர கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் மட்டுமே கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க அறிவுறுத்தப்பட்டள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல மருத்துவம் சார்ந்த கல்லூரிகளுக்கு, ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் Computer Operator வேலைக்குப் பயிற்சி- பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கோவில்கள் மீண்டும் மூடல்- தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)