மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 June, 2021 6:13 PM IST

டிஏபி உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து கடலூா் மாவட்ட வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி நெல் சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியாா் உர விற்பனை நிலையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 8,215 மெ.டன், டி.ஏ.பி.1,582 மெ.டன், பொட்டாஷ் 4,409 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 9,006 மெ.டன் அளவில் இருப்பில் உள்ளன.

கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து

இந்த நிலையில், மத்திய அரசு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களுக்கான மானியத்தை அதிகரித்துள்ளதால் டி.ஏ.பி. உரத்தின் விற்பனை விலையை அதிகபட்ச விலையாக மூட்டைக்கு ரூ.1,200 என நிா்ணயம் செய்துள்ளது. எனவே, கடலூா் மாவட்ட சில்லறை உர விற்பனையாளா்கள் டி.ஏ.பி. உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது. மேலும் காம்ப்ளக்ஸ் உரத்தையும் குறைக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

சந்தேகங்களுக்கு அணுகலாம்

வேளாண் பணிகளில் உரமிடுதல், பூச்சிகள், நோய் தாக்குதல் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், உரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் வட்டாரங்களில் உள்ள உர ஆய்வாளா்களை தொடா்பு கொள்ளலாம். அதன்படி, கடலூா் வட்டாரத்தினா்- 95248 65983 என்ற எண்ணிலும், இதேபோல பண்ருட்டி - 94860 80106, அண்ணாகிராமம் - 99763 43763, விருத்தாசலம் - 80723 29966, கம்மாபுரம் - 94889 38590, குறிஞ்சிப்பாடி - 94872 40227, பரங்கிப்பேட்டை- 87543 86163, மேல்புவனகிரி - 90478 26446, காட்டுமன்னாா்கோவில் - 87542 49075, ஸ்ரீமுஷ்ணம்-87542 49075, குமராட்சி - 87783 95580, கீரப்பாளையம் - 73395 56021, மங்களுா் - 80723 29966, நல்லூா் - 94889 38590 மற்றும் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை 90871 57057, 87543 86163 ஆகிய எண்களிலும் தொடா்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

English Summary: D.A.P. Fertilizer should not be sold above the price fixed by the Central Government says Department of Agriculture !!
Published on: 14 June 2021, 06:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now