வடக்கு மற்றும் மேற்கு வங்கக்கடலை ஒட்டி நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி (Depression)
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற கூடும்.
வறண்ட வானிலை (Dry weather)
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த நாட்களுக்கு (12.06.2021 முதல் 16.06.2021 வரை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
இலேசான மழை (Light rain)
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு (12-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
13.06.21
அதற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு (13-06-21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாறில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
வங்கக்கடல் (Bay of Bengal)
12.06.2021 முதல் 14.06.2021 வரை
வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.06.2021 முதல் 15.06.2021 வரை
தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் (Arabian Sea)
12.06.2021 முதல் 16.06.2021 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 43 முதல் 11 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!