காலநிலை மாற்றங்கள் தாண்டி நெற்பயிரை தாக்கும் காரணிகள் பல உள்ளன. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தினால் மகசூலில் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தப்பிக்க முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரை, முதன்மையான விவசாயசமாக நெற்பயிர் உள்ளது. இயற்கை பேரிடர், காலநிலை மாற்றங்களை தாண்டி நெற்பயிரை தாக்கும் காரணிகள் பல உள்ளன. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தினால் மகசூலில் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தப்பிக்க முடியும்.
நெற்பயிர்களை தாக்கும் நோய்கள், காரணிகள், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றை இங்கு காணலாம்.
பிரவுன் ஸ்பாட் – இலைப்புள்ளி நோய்:
முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும். இந்நோய் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும். விதை முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுகள் மடிந்துவிடும், தீவிர நோய் தாக்குதலினால் 50 சதவீதம் அளவிற்கு கூட மகசூல் குறைவு ஏற்படுகிறது.
நோய் பரவுவதற்கான சூழ்நிலை:
தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்து குறைபாடு கொண்ட நடவு வயலில் இந்நோயின் தீவிரம் அதிமாக தென்படுகிறது.
தடுக்கும் வழிகள் :
நோயின் ஆரம்ப தொற்றுநோயைக் கவனித்தபின் மெட்டோமினோஸ்ட்ரோபின் ha 500 மில்லி / ஹெக்டேர் தெளிக்கவும். வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருப்பதன் மூலம் நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.
மேலும் படிக்க: PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி
விதைப் பண்ணை அமைக்க அரசின் மானியம் இதோ!
இலையுறை கருகல் நோய் :
முதலில் நீள வட்ட வடிவ பச்சை கலந்த பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி, பின்னர் இப்புளிகள் பெரிதாக சாம்பல் நிற மையப்பகுதியையும் ஒழுங்கற்ற பழுப்பு நிற ஓரப்பகுதியையும் கொண்ட புள்ளிகளாக மாறும் .பிறகு இந்தப்புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மேல் நோக்கிப் பரவி இலையுறை கருகல் நோயை ஏற்படுத்துகிறது.
நோய் பரவுவதற்கான சூழ்நிலை :
பூஞ்சைகள், ஸ்கிளிரோசியா ( பூஞ்சின வித்து ) அல்லது பூஞ்சாண இலைகள் மண்ணில் பல மாதங்கள் இருந்து நோயை ஏற்படுத்துகிறது.பொதுவாக ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு தண்ணீர் பாய்தல் மூலம் இந்நோய் பரவுகிறது.
தடுக்கும் வழிகள் :
• மண்ணில் உரமாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் 2.5 கிலோ/எக்டர் அளிக்க வேண்டும். (இதனை 50 கிலோ தொழு உரம்/மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்).
• திரவ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்10மி.லி./கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவும்.
• இலைவழி வாயிலாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் (0.2 %செறிவுடன்) தெளிக்கவும்.
துங்ரோ நோய் :
நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் தாக்கக் கூடியது துங்ரோ நோய். குறிப்பாக துங்ரோ நச்சுயிரி தழைப்பருவத்தில் தாக்குதலை ஏற்படுத்தும். நெற்பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் தாக்கக் கூடியது. தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, குறைந்த தூர்களுடன் காணப்படும். இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற மஞ்சள் நிறமாக மாறிவிடும். துரு போன்ற நிறமுடைய புள்ளிகளும் ஏற்படும்.இலை நுனியிலிருந்து நிறமாற்றம் தொடங்கி இலைத்தாள் அல்லது இலை அடிப்பரப்பு வரை விரிவடைகிறது. பூத்தல் தாமதம், சிறிய கதிர் மற்றும் முற்றிலும் வெளிவராத கதிர்கள் இந்நோயிற்கான முக்கிய அறிகுறிகளும். பெரும்பாலான கதிர்கள் மலட்டுத் தன்மையுடனும் அல்லது பகுதி நிரம்பிய தானியங்களுடனும் காணப்படும்.
தடுக்கும் வழிகள் :
2% யூரியாவை 2.5 கிராம்/லிட்டர் மேன்கோசெப்புடன் கலந்து தெளிக்கவேண்டும்.நாற்றாங்காலில் 2.5 செ.மீ நீர் இருக்குமாறு வைக்கவும். கார்போஃபியூரான் 3 ஜி 3.5 கிலோ (அ) ஃபோரேட் 10 ஜி 1.0 கிலோ 20 சென்ட் நாற்றங்காலில் வீசித் தூவி விடவும்.
மேலும் படிக்க:
காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குக-விவசாயிகள் கோரிக்கை
நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலை கருகல் நோய்-அறிகுறியும், தடுக்கும் முறைகளும்