அடுப்பும் நெருப்பும் இல்லாமல் வெறும் தண்ணீரில் இடப்படும் இந்த ரக அரிசி சாதமாக மாறுகிறது. அஸ்சாமை பூர்வீகமாக கொண்ட இந்த மேஜிக் ரைஸ் குறித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
மேஜிக் ரைஸ் (Boka Saul)
போக்கோசால் (Boka Saul) இது மேஜிக் ரைஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதனை சமைக்கவே தேவை இல்லை. வெறும் தண்ணிரை உற்றினாலே போதும் இந்த அரிசி சாதமாக மாறுகிறது. இப்படி ஒரு அரிசி ரகத்தை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை தான். ஆனால் உண்மையில், இந்த வகை பாரம்பரிய அரிசியும் நாம் நாட்டில் விளைவிக்கப்பட்டு வருகிறது.
அஸ்சாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள இந்த பாரம்பரிய அரிசி தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது. இந்த அரிசியை அங்குள்ள மலைவாழ் மக்களால் விளைவிக்கப்பட்டு வருகிறது.
போக்கோசால் அரிசியின் சிறப்புகள்
-
போக்கோசால் அரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
-
இந்த அரிசியில் ஆறிய தண்ணீரை உற்றினால் சாதாரண ஆறிய சாதமாகவும், வெந்நீரை ஊற்றினால் சூடான சாதமும் தயாராகி விடுகிறது.
-
சாதாரண நீரில் 30 முதல் 40 நிமிடங்கள் இந்த அரிசியை ஊறவைப்பதன் மூலம் தானாகவே சாப்பிட தயாராகிறது. இது நாம் சமைத்து உண்ணும் அரிசி போலவே இருக்கும்.
-
போக்கோசால் என்ற அரிசி புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை விவாசாயிகள் ஆர்வம்
இந்த வகை போக்கோசால் அரிசியை இயற்கை விவசாயிகள் விளைவிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பீகாரில் மேற்கு சம்பாரன் ஹார்பூர் கிராமத்தில் விஜய் கிரி என்ற விவசாயி இந்த மேஜிக் அரிசியைப் பயிரிட்டு அறுவடைச் செய்து வருகிறார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கண்காட்சி மூலம் இந்த ரக அரிசி குறித்து அறிந்துக்கொண்ட விஜய் கிரி தற்போது இந்த ரக அரிசியின் தனது வயல்களில் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார்.
இதேபோல், தெலுங்கான மாநிலம் ராமரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயியும் வேளாண் ஆர்வலருமான ஶ்ரீகாந்த்தும் இதனை விளைவித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நெல் ரகங்களை பயிரிடும் அவர் இந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து மேஜிக் அரிசியை கொண்டுவந்து தனது வயல்களில் பயிரிட்டுள்ளார்.
உடலுக்கு உகந்ததா?
இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி இருப்பதாகவும், மேலும் இதில் 10.73 சதவீத நார்சத்து இருப்பதாக இந்திய வேளாண் ஆராய்சி கழகம் கூறியுள்ளது.
இந்த அரிசியில் சர்க்கரை கிடையாது மற்றும் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரத சத்துக்கள் உள்ளது, இது பொதுவான மக்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.
இந்த வகை அரிசி பெரும்பாலும் ராணுவ வீரர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சாப்பிட்டு வரும் நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் உடல் உழைப்பிற்கு ஏற்றதாக இந்த அரிசி வகை இருக்குமா என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் கேள்வி முன்வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க
ஆன்லைனில் நர்சரி செடிகள் விற்கும் சக்திவேல்! மக்களிடையே அமோக வரவேற்பு
சத்துக்கள் குறையாமல் காய்கறிகளை விளைவிக்க இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்!
காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்