தமிழகத்தில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய கேரள அரசின் வேளாண் துறை 'கார்டி கிராப்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கார்டி கிராப் (Cardi Graph)
காய்கறி, பலசரக்கு, பால், கால்நடை தீவனங்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்கின்றன. ஒட்டன்சத்திரம், கம்பம், தேனி, தென்காசி பகுதிகளில் இருந்து தினமும் 100 டன் வரை காய்கறி கேரளா செல்கிறது. காய்கறி விற்பனையில் பல இடைத்தரகர்கள் உள்ளனர். இதனால் கேரளத்தில் விலை பல மடங்கு உயர்ந்தது. இதை தடுக்க கேரள வேளாண்துறை கார்டி கிராப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
நேரடி கொள்முதல் (Direct Purchase)
இந்த அமைப்பு தமிழக பெரிய மார்க்கெட்களில் இருந்து காய்கறியை நேரடி கொள்முதல் செய்து கேரளாவில் நியாயமான விலையில் விற்க துவங்கியது. இது இடைத்தரகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலைகளை உயர்த்த முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் கிலோ ரூ.40 க்கு விற்கும் கொத்தமல்லி தழை அங்கு ரூ.140, கத்தரி ரூ. 110 என இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் கொள்முதல், விற்பனையை அதிகரிக்க கேரள அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க
வனவிலங்குகள் உலா வருவதால் பயிர்கள் பாதிப்பு!
பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!