தென்மேற்கு பருவமழைக் (SoithWest Monsoon) காலங்களில் ஆடிப்பட்ட பயிர்கள் விதைக்கப்படுகின்றன. இப்பருவத்தில் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் மகசூலை அதிகரிக்க முடியும். கோடைக்காலத்தில் நிலத்தை உழவு செய்து தரிசாக இடும் போது வாடல், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்க்காரணிகளான பியூசோரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் பூஞ்சாணங்கள் அழிக்கப்படுகின்றன.
கட்டுப்படுத்தும் முறை
உயிரியல் முறையில் பருத்தி (Cotton), பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறி, மலர் மற்றும் பழப்பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராமை ஒரு கிலோ விதையில் கலந்து விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். மண்ணில் எக்டேருக்கு 50 கிலோ மட்கிய உரத்துடன் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடும் போது வேரழுகல் வாடல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
வேப்பம் புண்ணாக்கு எக்டேருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
வேதியியல் முறையில் கார்பன்ட சிம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செடிகளின் தூர்களில் கார்பன்ட சிம் (பெவிஸ்டின்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கலந்து ஊற்றினால் வாடல் மற்றும் வேரழுகலைக் கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்து தெளித்தால் இலை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் அல்லது ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் காப்பர் மருந்தை கலந்து தெளித்தால் பாக்டீரியாவால் (Bacteria) தோன்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். நோயுற்ற செடிகளை பிடுங்கி எரிக்க வேண்டும். நோயுற்ற நாற்றுக்களை நடக்கூடாது. அளவான தழை மணிச்சத்து அதிகமாண சாம்பல் சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
கிருஷ்ணகுமார்,
உதவி பேராசிரியர்
செல்வி ரமேஷ்,
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை
அறிவியல் நிலையம்,
மதுரை.
98652 87851
மேலும் படிக்க