Farm Info

Wednesday, 18 November 2020 10:46 AM , by: Elavarse Sivakumar

Credit : Unsplash

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு, வேளாண் ஆராய்ச்சியில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆம்பெர் துபே கூறுகையில்:

  • ஆளில்லா விமானங்களான டிரோன்களைப் (Drones)  பயன்படுத்தி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட, இக்ரிசாட் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த அனுமதி, இக்ரிசாட் அமைப்பின் டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் திட்டம் (அலகு- 1) நிறைவேறும் வரை அல்லது ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படுகிறது.

  • வேளாண்மை குறித்த தரவுகளைச் சேகரிக்க ஆளில்லா விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • துல்லிய வேளாண்மை, வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு, சாகுபடி அபிவிருத்தி ஆகிய வேளாண் துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு பெரும் பங்களிப்பை அளிக்கிறது.

  • இதன்மூலம் இளம் தொழில்முனைவோரும் ஆய்வாளர்களும் ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி நாட்டிலுள்ள 6.6 லட்சம் கிராமங்களில் வேளாண்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்றார்.

மேலும் படிக்க...

நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!

பயிர்களின் Big Boss-ஸாகத் திகழும் அசோபாஸ்!

மரம் நட விரும்புபவரா நீங்கள்? களம் அமைத்துத் தருகிறது ஈஷா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)