Farm Info

Tuesday, 05 July 2022 10:02 PM , by: Elavarse Sivakumar

பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதற்கு மட்டுமே, நம்மில் பலர், கறிவேப்பிலையைப் பயன்படுத்துகிறோம். உண்மையில், கறிவேப்பிலை நம் உடலுக்கு அளிக்கும் நன்மைகள் ஏராளம். இதை உணர்ந்தால், நிச்சயம் நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள்.

நம்மூரில், இலவசமாகக் கொடுக்கப்படும் கறிவேற்பிலை, ஒரு கொத்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? எங்கு தெரியுமா?
இந்த கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கொத்துக் கறிவேப்பிலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தகவல்

மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கி உள்ளார்.

விலைப்பட்டியல்

அதன்படி பன்னீர் பாக்கெட் ரூ393-க்கும், வீட்டை பெருக்கும் துடைப்பம் ஒன்று ரூ 472, ஒரு கொத்து கறிவேப்பிலை இந்திய ரூபாய் மதிப்பில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

வைரலாகும் வீடியோ

மொத்தம் இந்திய பணத்தில் ரூ.7 ஆயிரத்துக்கு 10 பொருட்கள் தான் வாங்க முடியும் என்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)