சாண எரிவாயு கலன் அமைக்க மானியம் வழங்க முன்வர வேண்டும் என பல்லடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை விவசாயம் (organic farming)
பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கால்நடைகளை வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் சாணத்தை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
நவீன சாண எரிவாயு கலன் (நவீன சாண எரிவாயு கலன்)
இந்த நிலையில் இயற்கை முறையில் நவீன சாண எரிவாயு கலன் அமைப்பதற்கு விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகள் சிலர் கால்நடைகளின் சாணத்தை கொண்டும் இயற்கை எரிவாயு கலன் அமைத்துள்ளனர்.
விலையேற்றம் (Pricing)
அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகள், உரம், மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
எனவே சாணஎரிவாயுக் கலன் அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.மேலும் கால்நடைகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் சிலர் கால்நடைகளின் சாணத்தை கொண்டு இயற்கை எரிவாயு கலன் அமைத்துள்ளனர். இது நல்ல பயன் அளிக்கிறது.
மானியம் கிடைக்குமா? (Is there a grant?)
இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இயற்கை எரிவாயு கலன் அமைக்க அரசு மானியம் வழங்கினால் இயற்கை எரிவாயு கலன் அமைக்க ஏராளமான விவசாயிகள் முன்வருவார்கள். இதன் மூலம் விவசாயிகளின் எரிபொருள் செலவு மிச்சமாகும்.
சாண எரிவாயு, அழுத்தம் குறைவு என்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். சாண எரிவாயு கலன் அமைப்பதன் மூலமாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தங்களின் கோரிக்கையை ஏற்று அரசு சாண எரிவாயுக்கலன் அமைக்க மானியம் வழங்க முன்வரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!
நெல், வெங்காய பயிர்களுக்கு காப்பீடு- விவசாயிகளுக்கு அழைப்பு!