இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 January, 2022 8:32 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் பகுதிகளில் இந்த மாதமே, 34 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் நிலவுவதால், மக்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க, சித்த மருத்துவ துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

வாட்டும் வெயில்

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் இப்போதே உடல் வியர்வையில் முழுதும் நனையும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதே நிலைத் தொடரும் பட்சத்தில், கோடையை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்கிற அச்சம் மக்களுக்கு உருவாகியுள்ளது. வழக்கமாக மார்ச்., இறுதி முதல் மே., வரையிலான கோடையில், அதிக வெயில் நிலவும்.

அக்னி வெயில்

அதிலும், அக்னி நட்சத்திரம் துவங்கி, ஏப்., முதல் மே, வரையில், 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரளவுக்கு மட்டுமே வெயில் நிலவும். அதிகபட்சமாக, 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெயில் நிலவும்.


அறிவுரை (Advice)

ஆனால், நடப்பாண்டு ஜனவரியின் துவக்கத்திலேயே கடும் வெயில் நிலவுகிறது. தற்போதே, 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது தொடர்பாக, சித்த மருத்துவர் அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக கோட்டூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் வித்யாதேவி கூறியதாவது:

வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்துக்கள் குறைந்து மலச்சிக்கல், வியர்குரு, காலில் பித்த வெடிப்பு, தோல் 'அலர்ஜி', வேநீர் கட்டி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும்.

சர்க்கரை, ஐஸ் வேண்டாம் (Do not sugar, ice)

  • தவிர்க்க, சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும்.

  • நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் குடிக்க வேண்டும்.

  • மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது.

  • குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில், கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • அதீத வெப்பத்தால் முதியவர்களுக்கு வெப்ப தாக்குதல் (ஹீட் ஸ்ட்ரோக்) வர அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே முதியவர்கள் மதிய நேரம் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் தண்ணீர், குளிர்ச்சியான பானங்களைக் குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  • நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும், நான்கு முதல் ஐந்து லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும்.

கம்பு சிறந்தது

  • கம்பில் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் குறையும்.

  • நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரல் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும்.

  • நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடையும்.

  • இரவில் ஒரு ஆளுக்கு, 30 கிராம் சீரகத்தை வறுத்து, மூன்று லிட்டர், தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து அடுத்த நாள் முழுவதிலும் அந்த நீரை குடிக்கலாம்.

  • வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெயில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெயை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.

இவ்வாறு, ஆலோசனைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ரத்தாகுமா?

முரண்டுபிடிக்கும் மக்கள்-ரூ.3.44 கோடி அபராதம் வசூல்!

English Summary: Early Agni Heat Launcher- Some Ways to Escape From Vulnerability!
Published on: 18 January 2022, 11:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now