பஞ்சாப்பைச் சேர்ந்த சோனாலிகா டிராக்டர்ஸ் மட்டுமே இந்தியாவில் மின்சார டிராக்டரை வணிக ரீதியாக அறிமுகப்படுத்திய ஒரே டிராக்டர் நிறுவனம் ஆகும். டைகர் எலெக்ட்ரிக் என்று இந்த டிராக்டருக்கு பெயரிட்டுள்ளது சோனாலிகா நிறுவனம்.
கார்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் மினி லாரிகளுக்குப் பிறகு தற்போது டிராக்டர்களும் மின்சாரத்தில் இயங்கும். விவசாய விளைபொருட்களின் மொத்த செலவைக் குறைக்கும் வகையில் விரைவில் பேட்டரி எலெக்ட்ரிக் டிராக்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இந்த எலக்ட்ரிக் டிராக்டர், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான செலவும், உழவு செலவும் குறையும். இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.
மேலும், மின்சார டிராக்டரை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட மறுத்த, போக்குவரத்து அமைச்சர், டிராக்டரில் வேலை நடந்து வருவதாகவும் மேலும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். எலெக்ட்ரிக் டிராக்டர்களுக்கு உழவு போன்ற பாரம்பரிய முறை விவசாயத்திற்கு அதிக சக்தி தேவைப்படும். அதே வேளையில், அத்தகைய டிராக்டர்கள் பண்ணையில் இருந்து சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்லவும் உபயோகிக்கலாம் என்று கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரம் HDFC ERGO ஜெனரல் இன்சூரன்ஸ் EV உச்சி மாநாட்டில் ஒரு விவசாயி 300 கிலோ காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல, ரூ.200 செலவாகிறது. எனவே, அடுத்த சில நாட்களில் நான் மின்சார டிராக்டரை சந்தையில் அறிமுகப்படுத்துவேன்” என்றார் கட்காரி.
மின்சார டிராக்டரை அறிமுகப்படுத்திய Sonalika
நாட்டின் பல பகுதிகளில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியதால், கடந்த சில மாதங்களாக விவசாய விளைபொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆகவே இனி டீசல் விலைக்கு அஞ்சாமல் எலெக்ட்ரிக் டிராக்டர்கள் மூலம், சிக்கல் இல்லாமல் சிக்கனமாக விளைப்பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லலாம். இந்தியாவில் மின்சார டிராக்டரை வணிக ரீதியாக முதல் முறையாக பஞ்சாப்பைச் சேர்ந்த சோனாலிகா டிராக்டர்ஸ் அறிமுகப்படுத்தியது. டைகர் எலெக்ட்ரிக் என்று அழைக்கப்படும் சோனாலிகா, 2020-டிசம்பரில் ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. தி ஹிந்து பிசினஸ் லைன் படி, இந்த டைகர் எலெக்ட்ரிக் டிராக்டர், 11 கிலோவாட் மோட்டார் மற்றும் 500 கிலோ தூக்கும் திறன் கொண்டதாகும். மேலும், இதன் மூலம் தெளித்தல், வெட்டுதல், ரோட்டாவேட்டர் மற்றும் டிராலியை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இது உதவும்.
2026-ஆம் நிதியாண்டில் மஹிந்திரா எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகப்படுத்தலாம் (Mahindra to launch electric tractor in 2026)
இந்த ஆண்டு ஜனவரியில், எஸ்கார்ட்ஸ் நிறுவனம், மத்திய பண்ணை இயந்திரப் பயிற்சி மற்றும் சோதனை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவித்தது, மேலும் இது CMVR ஆதாவது Central Motor Vehicle Rules, 1989-க்கும் உட்பட்டதாகும். எஸ்கார்ட்ஸ்(Escourts) இன்னும் வணிகரீதியாக சந்தையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், இந்தியாவின் இரண்டு பெரிய டிராக்டர் தயாரிப்பாளர்களான Mahindra And Mahindra மற்றும் இந்தியாவின் உள்நாட்டு நிறுவனமான TAFE, டிராக்டர் சந்தையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்களே இன்னும் எலக்ட்ரிக் டிராக்டர்களை அறிமுகப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், Mahindra And Mahindra தனது சொந்த பிராண்டின் கீழ் மற்றும் ஸ்வராஜ் பிராண்டின் கீழ் 2026 க்குள் எலக்ட்ரிக் டிராக்டர்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: