கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு, சொட்டு நீர் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
100 % மானியம் (100% subsidy)
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்கக் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
மானியம் (Subsidy)
கிணற்றுப்பாசனத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு எக்டருக்கு, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 368 ரூபாய். இதர விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 115 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
ஆழ்துளைக் கிணற்றுப்பாசனத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 844 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 591 ரூபாய் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதல் மானியம்
இந்த திட்டத்தின்படி தற்போது, நில மட்டத்துக்கு கீழ் சொட்டு நீர் பாசனம் அமைப்பதாக இருப்பின், கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. எனவே கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை மற்றும் அமராவதி சர்க்கரை ஆலை அலுவலர்களையோ, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களையோத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் பதியலாம்விவசாயிகள், https://tnhorticuluture.tn.gov.in/horti/mimis என்ற இணைய தளத்தில், நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு பக்கத்தில், தாங்களே பதிவு செய்து கொள்ளலாம்.
தங்களுக்கு விருப்பமான நுண்ணீர் பாசன நிறுவனம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர்களைத் தொடர்பு கொண்டும், இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
கரிசனம் காட்டாத கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் !