பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணை விவசாயிகள் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ள நிலையில், இந்த வேலையை முடித்தால்தான் பணம் கிடைக்கும். எனவே விவசாயிகள் உடனடியாக இந்த வேலையை முடித்துக்கொள்வதுதான், உங்களுக்குத் தவணைத் தொகையைப் பெறுவதில் உள்ளச் சிக்கலைத் தீர்க்கும்.
விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்திருந்த பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைத் தொகையை, பணம் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், கடைசியாக கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணையை விடுவித்தார்.
பிஎம் கிசான் திட்டத்தில் புதிய விதிமுறை வந்துள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை முடித்தால்தான் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நிதியுதவி வருவதில் சிக்கல் ஏற்படலாம்.
எப்படி சரிபார்ப்பது?
-
பிஎம் கிசான் வெப்சைட்டிலேயே இதற்கான வசதி உள்ளது. அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
-
https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று 'Farmers Corner’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
-
அதில் e-kyc என்ற ஆப்சன் இருக்கும்.
-
அதில் சென்றால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.
-
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு ‘Get OTP ' பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும்.
-
அதைப் பதிவிட்டு ’submit Submit For Authentication' கிளிக் செய்ய வேண்டும்.
-
இத்துடன் சரிபார்க்கும் வேலை முடிந்துவிடுகிறது.
இதற்கு முன்னர் பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது.
அதில் ஏதேனும் பிழை அல்லது திருத்தம் இருந்தால் பணம் சரியாக வந்துசேராது. ஆனால் இப்போது கேஒய்சி சரிபார்ப்பும் விதிமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.எனவே தங்கள் தவணைத் தொகை பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க விவசாயிகள் இந்தவேலையை முடித்துவிட வேண்டியது கட்டாயமாகிறது.
மேலும் படிக்க...
புற்றுநோயைத் துவம்சம் செய்யும் 5 சூப்பர் உணவுகள்!
ஆயுளை அதிகரிக்கும் நெல்லி-சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் மந்திரசக்தி!