Farm Info

Wednesday, 09 February 2022 08:10 PM , by: Elavarse Sivakumar

ஒருவருக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது கொடுப்பதுதான் மிகப்பெரிய உதவியாகக் கருதப்படும். ஆனால், அரசாங்கத்தைப் பொருத்தவரை, அத்தனைக் கையாடல்களுக்கும் வாய்ப்பு இருப்பதால், நியாயமாகக் காத்திருப்பவர்கள் பல காலம் காத்துக்கொண்டே இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு விடுகிறது.

அவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல, 26 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கான மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தவருக்கு தற்போது இணைப்புக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்பு கேட்டு, 1995ல் விண்ணப்பித்தவருக்கு, தற்போது இணைப்பு வழங்க, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் மின்குறை தீர்ப்பாளர் தேவராஜன் உத்தரவிட்டுஉள்ளார். இதெல்லாம் தமிழக அரசில்தான் சாத்தியம் என்றால், அது மிகையாகாது.

1995ம் ஆண்டு

தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. ஆனால் விண்ணப்பிப்பவர்களுக்குக், குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்குவதில்லை. இதனால், பலரும் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இணைப்பு வழங்கும் முன் தயார் நிலையில் இருக்குமாறு, மின் வாரியம் சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்படும்.
திருச்சியை சேர்ந்த கண்ணன், புதுக்கோட்டையில் உள்ள தன் நிலத்திற்கு விவசாய மின் இணைப்பு கேட்டு, 1995ல் கீரனுாரில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.

அவருக்கு தயார் நிலையில் இருப்பதற்கான நோட்டீஸ், 2010ல் வழங்கப்பட்டு உள்ளது.மின் இணைப்பு வழங்காததால் பாதிக்கப்பட்ட மனுதாரர், புதுக்கோட்டை மின் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு அளித்த தீர்ப்பை ஏற்காத அவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்துஉள்ளார்.

அதிரடி உத்தரவு

அதை விசாரித்து குறை தீர்ப்பாளர் தேவராஜன் விடுத்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விண்ணப்பதாரர் தன் தயார் நிலையை பதிவு செய்யாதபட்சத்தில், 90 நாட்கள் அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் கடந்த விவசாய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். ரத்து செய்த விபரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
மேல்முறையீட்டாளரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகவோ, அதுபற்றி அவருக்கு தெரிவித்ததாகவோ, எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், இவரது விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாக கருத முடியாது.

விண்ணப்பம் பதிவு செய்து, 26 ஆண்டுகள் கடந்தும், விண்ணப்பம் ரத்து செய்யப்படாத நிலையில், தற்போது மின் இணைப்பு வழங்க மறுப்பது ஏற்க முடியாது. மறுபடியும் புதிய விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டுமெனில், தற்போது இருந்து, 15 ஆண்டுகள் மேல்முறையீட்டாளர் மின் இணைப்பு பெற காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.இத்தகைய நடவடிக்கை சாதாரண விவசாயிக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கப் பெற்று, ஆவணங்களைச் சமர்ப்பித்த தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க ஆணையிடுகிறேன். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க...

எல்லாக் கொரோனா வைரஸையும் தடுக்கும் ஒரேத் தடுப்பூசி!

தாமதமாக வந்த ஆசிரியர்கள் - தடாலடியாகக் கட்டாய விடுப்பு கொடுத்த CEO!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)