மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2020 12:23 PM IST

புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana)கீழ் நடப்பு சம்பா பருவத்திற்கான காப்பீடு தொடங்கியுள்ளது, பயிர் இழப்பை தடுக்க வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாக வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் தமிழகத்தில் வேளாண்மை பொரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், பல்வேறுபயிர் காப்பீட்டுத் திட்டங்களை தமிழக விவசாயிகளிடையே பரவலாக்க மத்திய மாநில அரசுகள் சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.
இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குதல், பண்ணை வருவாயை நிலைப்படுத்துதல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவித்தல் ஆகிய குறிக்கோள்களுடன் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2018 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் காப்பீடு திட்டத்தின்  சிறப்பம்சம்

  • கடுமையான வறட்சிஅல்லது வெள்ளம் போன்ற இயற்கைசீற்றம் ஏற்பட்டு அதனால் விதைப்பு செய்ய இயலாத நிலைஏற்பட்டாலும் அவர்களும் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

  • இயற்கைச் சீற்றங்களினால் விதைப்பு செய்யமுடியாத விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 25 சதம் இழப்பீடாக வழங்க வழிவகை உள்ளது.

  • ஆதே போல வயலில் அறுவடை செய்த பிறகு விளைபொருட்கள் வெள்ளத்தினால் அல்லது அதிகமழையினால் சேதமடைந்திருந்தால் அதற்கும் இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.

  • மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சாரிவு ஏற்பட்டு பயிர் பாதிக்கப்பட்டால் அதற்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது.

  • விதைக்க முடியாத சூழ்நிலை, சாகுபடி செய்யமுடியாத சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் ஏற்படும் இழப்பு அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, பகுதிசார்ந்த இயற்கைசீற்றங்களால் ஏற்படும் இழப்பு என பல்வேறு இழப்புகளுக்கும் இழப்பீடு பெற வழிவகை உள்ளது.

காப்பீடு செய்யும் முறை 

  • விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்கநகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.

  • பொதுசேவை மையங்களில் பதிவு செய்வதால் விவசாயிகள் உரிய ரசீதினைபெற்றுக் கொள்ளலாம், விவசாயிகளின் ஆதார் எண் சாரிபார்க்கப்படும், காப்பீடு செய்த விவசாயிகளின் விபரம் மத்திய அரசின் வலைதளத்தில் உடனடியாகபதிவு செய்யப்படும்.

  • அதேபோல் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கங்களிலும் ரசீதினை உடன் பெற்றுக் கொள்ளலாம்.

காப்பீடு செய்யப்படும் பயிர்கள் 

காப்பீடு செய்யப்படும் பயிர்கள்

Rabi  special season 2020-21

Last date for payment

நெல்

Nov 30th

பருத்தி 

Nov 15th

மக்காச்சோளம் 

Nov  30th

 

எந்தெந்த பகுதிகளில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது காப்பீட்டுத் தொகை என்ற விவரத்தினை விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர். அலுவலகங்களில் அணுகி தொரிந்துகொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்குபருவமழையால் தமிழகத்தில் வேளாண் பயிர்கள் பொரிதும் பாதிப்புக்குள்ளானதால், நடப்பாண்டில் இப்பருவமழையால் எதிர்நோக்கப்படும் பாதிப்புகளுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொண்டால் திட்ட பலன்களை முழுமையாகபெறமுடியும், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பொருளாதார இழப்பு ஏற்படும் பட்சத்தில் காப்பீடு மூலம் பலன் பெறமுடியும்.

சிவபாலன்
வேளாண் ஆலோசகர்
திருச்சி

Read This 

வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!!

English Summary: Farmers alert : Please ensure your Rabi crops within November 30th in PMFBY to protect crops
Published on: 07 November 2020, 12:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now