Farm Info

Wednesday, 26 August 2020 07:38 AM , by: Elavarse Sivakumar

Credit: IndiaMART

திருவாரூர் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் (Agriculture Machinery) பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  • வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள்-கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள்-கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  • வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

  • பின்னர் விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in-ல் இணைக்கப்படும்.

  • விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை ஒப்புதல் வழங்கப்பட்ட விற்பனை முகவரை, தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

  • விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்துக்கொள்ளலாம்.

  • குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்தில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேளாண் எந்திரங்கள் கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர், விவசாயிகள் அதே எந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால் அவர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

Credit: Greaves Cotton

  • ஏற்கனவே 2019-20 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட முன்னுரிமை விண்ணப்பங்கள் இந்த ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்.

  • ஒரு நிதியாண்டில் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும்.

  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான், அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் பெற முடியும்.

  • வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றிட ஏதுவாக 55 டிராக்டர்கள், 34 பவுர் டில்லர்கள், 8 நடவு எந்திரங்கள், 12 ரோட்டடோவேட்டர்கள், 8 வைக்கோல் கட்டும் எந்திரங்கள் வாங்கி கொள்ள நடப்பு ஆண்டில் ரூ.3 கோடியே 30 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • இதேபோல் 4 வாடகை மையங்கள் அமைக்க ரூ.40 லட்சங்களும் மொத்தம் ரூ.3 கோடியே 70 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தனிப்பட்ட விவசாயிகளுக்குரிய வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வருகிற 28-ந் தேதி மாலை 3 மணிக்கு மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

  • இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன் வந்து முன்னுரிமை அடிப்படையில் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறுக் கேட்டு கொள்ளப்படுகிறது.

  • மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை திருவாரூர், உதவி செயற்பொறியாளர் வோளாண்மை பொறியியல் துறை மன்னார்குடி ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...


"Uzhavan app" மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி? முழு வழிமுறைகள் இங்கே!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயியா நீங்கள்? ரூ.50ஆயிரம் வரை நிதியுதவி தருகிறது தமிழக அரசு!

மக்காச்சோள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு 35% மானியம்- தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)