Farm Info

Friday, 18 December 2020 01:43 PM , by: KJ Staff

Credit : Vikatan

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மேட்டுப்பகுதி நிலங்களில் நிலத்தைச் சீரமைக்கவும் விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கேற்ப மண்வளப் பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்தவும் அதேசமயம் மிகவும் குறைவான வாடகையில் மேற்கண்ட பணிகளைச் செய்வதற்காக வேளாண்மை பொறியியல் துறை (Department of Agricultural Engineering) மூலம் ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி எந்திரங்கள் விவசாயப் பணிகளுக்காக மட்டும் வாடகை (Rent) அடிப்படையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வாடகைக்கு எந்திரங்கள்:

தமிழக வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் மொத்தமாக 10 ஹிட்டாச்சி (Hitachi) எந்திரங்களும், 60 ஜேசிபி (JCB) கருவிகளும், தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில் ஒரு மணி நேரத்துக்கு ஹிட்டாச்சி எந்திரம் பயன்படுத்த 1,440 ரூபாயும் ஒரு மணி நேரம் ஜேசிபி எந்திரம் பயன்படுத்த 660 ரூபாயும் வாடகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு இக்கருவிகளை வாடகையில் பெற்றுக் குறைந்த செலவில் கட்டமைப்புகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். இக்கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன.

எந்திரங்களின் பயன்கள்:

  • அனைத்து வகை நிலங்களிலும், முறையான உயரமான கரைகள் அல்லது வரப்புகள் அமைக்க உதவும்.
  • குழி எடுத்து வரப்பு அமைத்தல் என்ற தொழில்நுட்பத்தின் படி பட்டா நிலங்களில் மண் அரிமானத்தைத் (Soil erosion) தடுத்து அதிகமான அளவு மழைநீரை நிலங்களில் தேக்கி வைத்து, நிலத்தடி நீர் (Ground Water) பெருக வாய்ப்பாக அமையும்.
  • நிலத்தில் ஓடும் ஓடைகளை முறைப்படுத்தி மண் அரிமானத்தைக் குறைக்கப் பெரிதும் உதவும்.
  • விவசாய நிலங்களுக்குள் ஏற்படுத்தப்படும் பாதைகள் மற்றும் கட்டமைப்புகளை முறைப்படுத்தவும், பாறைகள் போன்ற கடின அமைப்புகளை வகைப்படுத்தவும் உதவும்.
  • மழைக்காலங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நிலத்தில் தண்ணீர் தேங்குவதைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பாக அமையும்.
  • நீர்வடிப்பகுதி திட்டங்கள் (Watershed projects) செயல்படுத்தப்பட்ட நிலங்களில் இக்கருவிகளைச் செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்.

இக்கருவிகளை முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்குப் பெற, அருகிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krishi Jqgran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

காளானின் உபரிநீரை, அசோலா மற்றும் கீரைகளுக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம்!

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)