தினசரி வருவாய் தரும் பயிர் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பா.இளங்கோவன் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தினந்தோறும் இலாபம் தரும் பயிர்களை நாம் பயிரிட்டால், அன்றாடத் தேவைகளுக்கு அது பலனாக அமையும்.
தினசரி வருமானம் (Daily Income)
நெல் பயிரிடும் விவசாயிகள் மகசூல் மற்றும் வருவாய் ஈட்டுவதற்கு, 3 மாதங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அதேபோல, கரும்பு மற்றும் பிற ரக பயிர்கள் சாகுபடி செய்யும் போது, மகசூல் வரும் வரையில் வருவாய்க்கு காத்திருக்க வேண்டி உள்ளது. பயிர் சாகுபடி செய்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில், தினசரி வருவாய் தரக்கூடிய சிறுகீரை, பாலக்கீரை, அரைகீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை சாகுபடி செய்வதில், விவசாயிகள் முனைப்பு காட்டலாம்.
இது தவிர, ரோஜா, முல்லை, மல்லி, துளசி,சம்பங்கி, கனகாம்பரம்,செவ்வரளி ஆகிய பூப்பயிர்கள் சாகுபடி செய்யலாம். இதனால், தினசரி வருவாய் கிடைக்கும். இந்த வருவாயை பயன்படுத்தி, உரம், கூலியாட்கள், விவசாயிகளின் வீட்டு தேவை செலவு என, அனைத்து வித செலவினங்களுக்கு, உபயோகப்படுத்தலாம். நெல், கரும்பு ஆகியவை அறுவடை செய்யும் போது, விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் இருப்பு கையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
தினசரி வருமானம் தரும் பயிர்களால், நமக்கு ஏற்படும் நஷ்டத்தையும் ஈடுகட்ட முடியும். ஆதலால், விவசாயிகள் குறுகிய காலப் பயிர்கள் மற்றும் தினசரி வருமானம் தரும் பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
தொடர்புக்கு
பா.இளங்கோவன் 98420 07125
மேலும் படிக்க
261 கோடி மரக்கன்று நடுவதற்கு திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு!