குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய ஜெர்மன் திட்டம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் இணைந்து, நெல் பயிர் மற்றும் உளுந்துக்கு ட்ரோன் மூலம் இலைவழி ஊட்டச்சத்து தெளிப்பு குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.
தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையாலும், சாகுபடி செலவு அதிகரிப்பதாலும் விவசாயிகளுடைய நிகர வருமானம் குறைந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்ய ட்ரோன் மூலம் இலைவழி மருந்து தெளிப்பதன் மூலம் வருமானத்தை பெருக்க புதிய திட்டம் அறிமுகம்.
புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் இலைவழி நுண்ணூட்டம் செலுத்தி விவசாயிகள் மற்றும் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் உளுந்திற்கும், நெல்லில் நானோ யூரியா மற்றும் எதிர் உயிர் கொல்லி கரைசல் தெளித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பரம்பூர் பெரிய கண்மாய் பாசன பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கம் நடைபெற்றது.
மேலும் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியர் மாரிமுத்து விவசாயிகளுக்கு ட்ரோன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
ட்ரோன் தொழில் நுட்பமானது நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, மற்றும் கரும்பு ஆகிய பயிர்களில் நானோ யூரியா TNAU பயிர் , மற்றும் பி.பி. எப்.ம் (இளஞ்சிவப்பு மெத்தலோ பாக்ட்டீரியம் ) தெளிப்பு பற்றிய செயல் விளக்கம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தியதோடு ட்ரோன் இயக்குவது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக இதில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: