திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினர்.
தொடர்ந்து, தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க:
கண் சார்ந்த நோய்களை குணப்படுத்த சூப்பரான 5 டிப்ஸ்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 ! ஜூன் 3ல் தொடங்க திட்டம்!