Farm Info

Monday, 28 December 2020 03:51 PM , by: KJ Staff

Credit : Dinamalar

விதை ஈரப்பதம் (Seed moisture) என்பது விதையானது ஈர்த்து வைத்துள்ள தண்ணீரின் அளவு ஆகும். விதையின் ஈரப்பதம் சவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. பயிரிடுதலில் விதை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதம் ஒரு விதையின் முளைப்புத்திறன், விதைக்கெடுதல், பூச்சி தாக்குதல் மற்றும் அதிகபட்ச சேமிப்பு காலம் (Maximum storage period) ஆகியவற்றை நிர்ணயம் செய்கிறது. விதையின் ஈரப்பதம் மிகக்குறைவான நிலையில் இருந்தாலும், மிக அதிகம் இருந்தாலும் விதையின் முளைப்புத்திறன், சேமிப்பு கால அளவு, பூஞ்சானம் மற்றும் பூச்சி தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விதையின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் சேமித்து வைக்க வேண்டும். விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது விதைத்தரத்தை (Seed quality) முடிவு செய்யும் முக்கிய காரணியான, விதை முளைப்புத்திறன் குறையும்.

விவசாய நிலத்தை சமப்படுத்த வந்துவிட்டது ஒளிக்கற்றை கருவி!

அதிகபட்ச ஈரப்பத சதவீத அளவு:

ஒவ்வொரு பயிரின் விதை ஈரப்பதமும் அப்பயிருக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல் (Paddy) 13 சதவீதம், சிறுதானியங்கள் (Cereals) 12%, பயறு வகைகள் (Legumes) 9%, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் தலா 9%, பருத்தி (Cotton) 10% என விதை பயன்பாட்டிற்கான அதிகபட்ச ஈரப்பத சதவீதம் (Maximum moisture percentage) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் விதைப்பு செய்யப்பட்ட சோளம், கம்பு, பாசி, உளுந்து போன்ற பயிர்களின் அறுவடை (Harvest) நடக்கவுள்ளது. எனவே, விவசாயிகள் விதையினை நன்கு உலர்த்தி விதையின் ஈரப்பதத்தை மேற்குறிப்பிட்ட அளவிற்குள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!

விதையின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை அறிந்து கொள்ள மாவட்ட விதை பரிசோதனை அலுவலகங்களை (District Seed Testing Offices) தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.

மேலும் தகவலுக்கு:

சி.சிங்காரலீனா
விதை பரிசோதனை அலுவலர் மதுரை
இரா. இராமசாமி
வேளாண் அலுவலர்
பா.சாய்லெட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்
99528 88963

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

அறிமுகமானது, கீழே சாயாத சீரக சம்பாவின் புதிய நெல் வகை!

விவசாய நிலத்தை சமப்படுத்த வந்துவிட்டது ஒளிக்கற்றை கருவி!

குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)