சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளைக்கொண்டு ஆர்கானிக் (Organic)முறையில் பதப்படுத்தி அதனை உரமாக பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல், சோளம், கம்பு, காய்கறிகள் மற்றும் பூ வகைகள் என பல்வேறு விதமான விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது விருதாச்சலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது. வழக்கமாக அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை வெப்பம் அதிகமான இடங்களில் உலத்தி பிரித்து எடுப்பது வழக்கம். இதற்காக அப்பகுதி மக்கள் விருத்தாச்சலம்- கடலூர் மற்றும் சிதம்பரம் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். நெல் முற்றிலுமாக உலர்த்தப்பட்ட பின் தேவையான விவசாயப் பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு மீதமுள்ள விவசாயக் கழிவுகளைச் சாலையோரம் குவித்து வைக்கின்றனர்.
இதன் காரணமாக சாலை ஓரங்களில் கிடக்கும் காய்ந்த விவசாய கழிவுகள் அவ்வப்போது மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் கருகி நாசமாகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாய கழிவுகளை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
உரமாகும் கழிவுகள்!
விவசாய சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை ஆர்கானிக் முறையில் பதப்படுத்தி நல்ல உரமாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கையில் சாலையோரம் கிடக்கும் விவசாய கழிவுகளை வாகனத்தில் ஏற்றி அதனை பதப்படுத்தி நல்ல இயற்கை உரமாக மாற்றும் முயற்சியில் அப்பகுதி விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
தறபோதைய சூழலில் பெருப்பாலும் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தியே சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்கள் பாதிப்பு அடைகிறது. மேலும் அதிக செலவும் எடுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பெரும்பாலான விவசாயிகள் இயற்கையான உரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
மண்புழு உரம்!
இயற்கை பொருட்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மண்புழு போன்ற உரங்களுக்கு தற்போது விவசாயிகள் மத்தியில் மத்தியில் மதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையக்கூடிய பொருள்களில் கிடைக்கும் கழிவுகளைப் கொண்டு சிறப்பான முறையில் மண்புழு உரம் தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.
விளைநிலங்களில் விளையும் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு விவசாய கழிவுகளை சாலை அல்லது மற்ற பொது வெளிகளில் ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர்த்து, அக்கழிவுகளைச் உரமாக மாற்றும் முயற்சியில் அனைத்து விவசாயிகளும் ஈடுபடவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாலையோரம் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை அரசு அகற்றுவதை தவித்து, அதனை இயற்கை முறையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!
TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!