மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் 2.37 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
3 நாட்களில் நடவு (Planting in 3 days)
அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் செப். 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்களில் நடைபெற்றது.
175 விவசாயிகள் (175 farmers)
இதில் மொத்தம் 175 விவசாயிகள் தங்களுடைய 1,008 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பண மதிப்பு மிக்க மூங்கில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இதன் தொடக்க விழா நிகழ்வு புதுக்கோட்டையில் செப்.14-ம் தேதி நடைபெற்றது. இதில் மரம் தங்கசாமியின் மகன் தங்கக் கண்ணன் அவர்கள் பங்கேற்று முதல் மரக்கன்றை நடவு செய்து இப்பணியைத் தொடங்கி வைத்தார்.
பிரிக்க இயலாத ஒன்று (Something inseparable)
காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்துள்ள இப்பணி குறித்து அவர் கூறுகையில், என் தந்தைக்கும் ஈஷாவுக்குமான தொடர்பு என்றும் பிரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. நடைப் பயணமாகக் கூட சென்று விவசாயிகளிடையே மூங்கில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பதை நினைவு கூர்ந்தார்.
அனைத்து விவசாயிகளும், தங்கள் நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பது என் தந்தையின் அறிவுரை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் முயற்சி (Continuing effort)
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்த காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழக விவசாயிகளிடம் மரம் நடும் பழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து மரம் சார்ந்த விவசாய முறையின் நன்மைகளை எடுத்து கூறி வருகின்றனர். மேலும், விவசாயிகளின் விருப்பத்தின் படி, அவர்களின் மண் மற்றும் நீரின் தன்மையைப் பரிசோதித்து அவர்களுக்கேற்ற மரங்கள் குறித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க...
2 நாட்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு- காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்பாடு!