தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், தென்னங்கன்று வளர்த்து விவசாயிகள் விற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு தேங்காய், 9 - 10 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
தேங்காய் விலை வீழ்ச்சி
தோட்ட பராமரிப்பு, தேங்காய் பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு, இடுபொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டி, ஓரளவு லாபம் பார்க்க வேண்டுமானால், ஒரு தேங்காய்க்கு 15 முதல் 17 ரூபாய் விலை கிடைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
தொடரும் விலை வீழ்ச்சியால், பலர் தென்னை பராமரிப்பை கைவிட்டுள்ளனர். நஷ்டத்தில் சாகுபடி செய்வதை விரும்பாத விவசாயிகள், தேங்காயை தென்னங்கன்றாக வளர்த்து, விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ஒரு ஜோடி தென்னங்கன்று, அதன் வயதுக்கேற்ப, ஜோடி, 125 முதல், 250 ரூபாய் விற்கிறோம்.
ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் சிரமப்படும் விவசாயிகள், மீண்டும் தென்னை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், தென்னங்கன்று வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
மேலும் படிக்க
நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!