ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து குறைந்து வரும் நிலையில், விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 75க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு நீலகிரி உருளைக்கிழங்குகளும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளும், தரம் பிரித்து, ஏலம் விடப்படுகிறது.
உச்சத்தில் விலை (Price at peak)
ஊட்டி உருளைக்கிழங்கு நல்லக் கெட்டித் தன்மையும், நல்ல சுவையும் கொண்டவை என்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் விரும்பி வாங்குகின்றனர். அதனால், மார்க்கெட்டில் எப்போதும், ஊட்டி உருளைக்கிழங்கின் விலை உயர்ந்திருக்கும்.
இந்நிலையில், குஜராத், கோலார், இந்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து அறுவடை செய்யும் கிழங்குகள், லாரிகளில் கொண்டு வரப்பட்டு, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
வெளியூர் உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால், ஊட்டி கிழங்கின் வரத்து குறைந்து, விலையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் முடிந்த நிலையில் தினமும் 30 முதல் 35 டன் உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.
ஆனால் வெளியூர்களில் இருக்கும் குளிர்பதன கிடங்குகளில் இருந்தும், நாளொன்றுக்கு, 700 டன் முதல் 800 டன் உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.
சீசனில் ஜோர் விற்பனை (Sales high during season)
45 கிலோ கொண்ட ஊட்டி உருளை கிழங்கு சீசன் காலத்தில் ஒரு மூட்டை, குறைந்தபட்சம் ரூ.1,500ல் இருந்து அதிகபட்சம், ரூ.2,400க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஊட்டி கிழங்கு வரத்து குறைவான அளவில் வந்தபோதிலும், வெளியூர் கிழங்கு வரத்து அதிகரிப்பால், ஊட்டி கிழங்கு விலை குறைந்துள்ளது. அதனால், குறைந்தபட்சம் ரூ.900ல் இருந்து, அதிகபட்சம் ரூ.1,500 வரை விற்பனையாகிறது.
குஜராத் மற்றும் ஆக்ரா கிழங்கு ரூ.650 முதல் ரூ.700 வரையும், கோலார் கிழங்கு ரூ.85 முதல் ரூ.900 வரையும் விற்பனை செய்யப்படுவதாக உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!