உரம், விதை, இடுபொருள் மானியம் ஆகியவற்றைப் பெற விரும்பும் விவசாயிகள் செல்போன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்னும் நிலையை ஏற்படுத்த அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது.
வேளாண்மைத் துறை மூலம் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விதைநெல், நுண்ணூட்ட உரங்கள், உயிர்உரங்கள் உள்ளிட்டவற்றை இனிமேல் மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயம் ஒரு செல்போன் வைத்திருக்க வேண்டும். அதில் குறுஞ்செய்தி பெறும் வசதியை வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
ஆன்லைனில் அப்ளிகேஷன் (Online application)
அவருடைய சாகுபடி நிலங்களில் சர்வே எண்கள் பற்றிய முழு விபரமும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். விரிவாக்க அலுவலர், கிராமத்திற்கு எப்போது வருகிறார் எனக் காத்திருந்து அவரிடம் ஆன்லைனில் அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின்னர் விரிவாக்க மையத்திற்குச் சென்று அவரது ஆதார் அட்டையைக் காண்பித்து, பணம் செலுத்தி, அவருக்கு விரிவாக்க அலுவலர் அனுமதித்த இடுபொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
முழுத்தொகை (Full Amount)
விரிவாக்க மையத்தில் உள்ள வேறு இடுபொருட்களில் ஏதேனும் தேவைப்பட்டால், அவர் முழுத்தொகையைச் செலுத்தித்தான் வாங்க வேண்டும்.
3 பருவங்களுக்கு ஒருமுறை (Once in 3 Season)
விவசாயி ஒருமுறை தனது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இடுபொருட்களை வாங்கிவிட்டால், பிறகு 3 பருவங்களுக்குப் பின்னர்தான் மீண்டும் மானியத்தில் இடுபொருள் வாங்க முடியும். ஏற்கனவே உள்ள நடைமுறையில் பொருட்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு பாதிப்பு (Impact on farmers)
இந்நிலையில், இந்த ஆன்லைன் அப்ளிகேஷன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், மானியத்தில் இடுபொருட்களைப் பெறுவது என்பது விவசாயிகளுக்குக் கேள்விக்குறியாகிவிடும்.
பழைய முறையே வேண்டும்
பல மாவட்டங்களில் 3 போகம் சாகுபடி மேற்கொள்ளப்படுவதால், இந்தப் புதிய முறை விவசாயிகளுக்கு எவ்வகையிலும் உதவாது. எனவே விவசாயிகள் பழைய முறையைத் தொடர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒருதலைபட்சமாக (Unilaterally)
இதுமட்டுமல்லாமல், எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு விதை ரகம், நுண்ணூட்ட உரம், கிடங்கிற்கு வந்த உடன், விரிவாக்க அலுவலர் நினைத்தால், தனக்கு வேண்டிய விவசாயிக்கு மட்டும் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வைத்துக் கொண்டால் போதும். வேறு விவசாயிகள் கிடங்கிற்குச் சென்றால்கூட அந்த இடுபொருட்களைப் பெற இயலாது.
சப்தமில்லாமல் சதித்திட்டம் (Conspiracy without noise)
இதன் மூலம் விவசாயிகளுக்கு எதிரானச் சதித்திட்டம் சப்தமில்லாமல் அரங்கேற்றப்பட்டு வருகிறது.ஆகவே இந்த விஷயத்தில் கருணை காட்ட முன்வர வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க...
2,600 ஏக்கர் விவசாயத்துக்கு தண்ணீர் விடக்கோரி நெல்லை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!