மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 January, 2022 2:06 PM IST
Fertilizer subsidy 2022: Expectations

மத்திய அரசும் உதவி செய்வதால் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அதே நேரத்தில், வேளாண் துறையை ஊக்குவிக்கும் வகையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கை சுமார் 18 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

உர பட்ஜெட் 2022 ல் $ 19 பில்லியன் பெறலாம்

அதே நேரத்தில், தரவுகளின்படி, சந்தை விலையை விட குறைவான விலையில் உர நிறுவனங்களுக்கு விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்றதற்காக இழப்பீடு வழங்குவதற்கு, அரசு பட்ஜெட் மதிப்பிடுகிறது. ஆம், உர பட்ஜெட்டில் சுமார் 19 பில்லியன் டாலர்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

இறுதி முடிவு பிப்ரவரி 1 அன்று வரும்

பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட்டில் உர மானியமாக ரூ.1.4 லட்சம் கோடி (18.8 பில்லியன் டாலர்) நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. மூலப்பொருட்களின் அதிக விலை காரணமாக மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில், இது 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இதில் விவாதம் இன்னும் நடந்து வருவதும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே இலக்கு

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் சுமார் 60% பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்கு அவர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கலாம். இருப்பினும், அரசியல் சூதாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், 2022ல் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கு நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2021 இல் அத்தகைய அதிகரிப்பு இருந்தது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கு ரூ.1,31,531 கோடி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில், 2021-22 ஆம் ஆண்டில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைக்கு ரூ. 8,514 கோடி ஒதுக்கப்பட்டது, இது 2019-20 ஆண்டு உடன் ஒப்பிடும்போது 6% அதிகரிப்பு ஆகும்.

அதே நேரத்தில், பிப்ரவரி 2021 இல் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் சுமார் 80,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை அடுத்து எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசு நடப்பு ஆண்டில் உர மானியத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க:

அரியர் மாணவர்களுக்கு, அமைச்சர் பொன்முடி வெளியிட்ட குட் நியூஸ்!

கண்ணை கவரும் ரோஜா சாகுபடி செய்ய தேவை, பயன் என்னன்ன?

English Summary: Fertilizer subsidy 2022: What is the status of fertilizer subsidy to farmers in the budget?
Published on: 24 January 2022, 02:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now