Farm Info

Saturday, 30 April 2022 10:17 AM , by: Elavarse Sivakumar

விவசாயிகளுக்கான உர மானியத்தை 2500 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

விவசாயிகள் தங்களது விவசாயத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்த உர மானியம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை எனவும், அதை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மானியத் தொகையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உர மானியத்தை தற்போதுள்ள 1,650 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

உர மானியம் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ரூ.6,000 கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மானிய உயர்வு ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்த காரணத்தால் அதன் சுமையை வாடிக்கையாளர்களான விவசாயிகள் மீது சுமத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு உண்டானது.

எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்தான் தற்போது உர மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!

தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)