மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 December, 2020 10:54 AM IST
Credit : CNN.com

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களை  (BJP  Alliance Leaders) சந்திக்கப் போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்

தொடரும் போராட்டம் (Protest Continue)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கடந்த 25 நாட்களாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி (Negotiation failed)

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், மத்திய அரசு மட்டும் செவி மடுக்க மறுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் நடைபெற்ற 6 கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

உண்ணாவிரதப் போராட்டம் (The hunger strike)

இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக திங்கள் கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தங்களது அடுத்தக் கட்ட முடிவு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயசங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்த ஏதுவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அடுத்த வாரம் நேரில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன் மூலம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பாஜாகவுக் நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

மழையால் வெளியேறும் உரஇழப்பைத் தடுக்க - நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்!!

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!

English Summary: Fighting farmers in Delhi - decided to meet the leaders of the National Democratic Alliance!
Published on: 22 December 2020, 10:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now